Home செய்திகள் இந்தியா பொருளாதாரம் மீண்டுள்ளதா ? மேலும் மீளுமா ரிசர்வு வங்கி பதில்..

பொருளாதாரம் மீண்டுள்ளதா ? மேலும் மீளுமா ரிசர்வு வங்கி பதில்..

284
0
RBI
Share

கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சரிவிலிருந்து தற்போது இந்தியப் பொருளாதாரம் மெல்ல மீளத் துவங்கியுள்ளது. பொருளாதாரம் மேலும் உயருமா என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி தற்போது பதில் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் முதல் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு தற்போது பல்வேறு தளர்வுகள் அளித்ததால் மெல்ல முன்னேறத் துவங்கியுள்ள பொருளாதாரம், முழு உத்வேகத்துடன் இன்னும் உயரத் தொடங்கவில்லை. ஏனென்றால் அளித்துள்ள தளர்வுகளில் பேருந்துகள் போன்ற போக்குவரத்து சேவைகள் மும்முரமாகச் செயல்படவில்லை. எனவே பொருளாதார வளர்ச்சிப் பாதையை நோக்கி மீண்டும் திரும்ப வாய்ப்பு குறைவு தான்.

பொறியியல் கல்லூரியில் அரியர் வைத்திருந்தாலும் பாஸ் ! தமிழக அரசு அறிவிப்பு

கடந்த கால் ஆண்டை காட்டிலும் தற்போது சிறிய ஏற்றம் அடைந்துள்ள பொருளாதாரம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி போன்றவற்றில் இன்னும் சகஜ நிலை ஏற்படாததால் இந்த நிலை சற்று மந்தமாக உள்ளதாகக் கருதுகின்றனர். எனவே இயல்பு நிலை திரும்ப 2021 ஜனவரி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here