Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் பேருந்து போக்குவரத்து இயக்கப்படுமா ? ஊரடங்கு நீடிப்பில் சில தளர்வுகள்…

பேருந்து போக்குவரத்து இயக்கப்படுமா ? ஊரடங்கு நீடிப்பில் சில தளர்வுகள்…

596
0
busses
Share

கொரோன பரவலால் நான்காவது முறையாக மே 31 நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி  நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி சார்ந்த நிறுவனங்களும் இயங்காது.
epsகோவில்கள், திரையரங்குகள், புதுக்கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள் போன்றவையும் செயல்படாது.
இதேபோன்று பொது போக்குவரத்து சேவைகளான, விமானம், ரயில், பேருந்து சேவைக்கும் அனுமதி கிடையாது. ஆனால் ஒரு சில மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில் ஆகிய பொதுப் போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இன்று முதல் அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்கள் உடன் இயங்கும் என்பதால், அவர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதைத் தவிர, ஆட்டோ, டாக்ஸி, ரிக்ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில், லாட்ஜ்கள், ரிசாட்ர்டுகள் போன்றவையும் இயங்காது. அவசர மருத்துவச் சிகிச்சைக்கு மட்டும் இ-பாஸ் முன்பதிவு செய்து, டாக்ஸி, ஆட்டோக்களை பயன்படுத்தலாம். இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என அறிவித்துள்ளது.
Busesசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மட்டும் எந்தவித தளர்வுகள் இன்றி இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.
அதேசமயம், கொரோனா பாதிப்பு குறைந்த 25 மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, கோவை, சேலம், ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, வேலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, TN e-pass ஏதும் இல்லாமல் இந்த மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கலாம். நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்திக்  கொள்ளலாம். அதேசமயம், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல TN e-pass பெற  வேண்டியதும் அவசியம்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 பேரும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் இருவர் மட்டுமே பயணிக்கலாம்.
இந்த 25 மாவட்டங்களில் வேளாண், வியாபாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு, இ-பாஸ் இல்லாமல், வாடகை வாகனங்கள் மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்தலாம். மற்றபடி, தேவையின்றி வீட்டைவிட்டு மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களை ஈடுபடுத்தலாம். 100 நபர்களுக்கும் குறைவாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளில் இனி 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 100 நபர்களுக்கு அதிகமாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 50 சதவீத  பணியாளர்களுடன் இயங்க வேண்டும். இவை, சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருந்தும்.
தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள், குறைந்தபட்ச பணியாளர்களுடன் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டும், தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here