Home செய்திகள் இந்தியா IPL ஸ்பான்சர்ஷிப் ! இனி dream11 தான்..

IPL ஸ்பான்சர்ஷிப் ! இனி dream11 தான்..

390
0
Share

IPL கிரிக்கெட் போட்டியில் இவ்வளவு காலம் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தான் ஸ்பான்சர்ஷிப் ஆக இருந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலின் காரணமாகச் சீன பொருட்கள் தடை இந்தியாவில் வலுத்தது.

அதனால் விவோ ஸ்பான்சர்ஷிப்பை IPL நிர்வாகம் புறக்கணித்தது. அதன் பிறகு இந்தப் போட்டி நடத்தப்படுமா என்பது கேள்விக் குறியானது. ஏனென்றால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் எந்த வித நிகழ்வு நடத்தப்படவில்லை.

இப்படியிருக்க UAE நாடுகளில் IPL கிரிக்கெட் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஸ்பான்சர்ஷிப் டைட்டிலை யார் இருப்பார்கள் என்று கேள்வி எழும்பியது. அதன் பிறகு பிசிசிஐ நிர்வாகம் ஸ்பான்சர்ஷிப்பை ஏலம் விட்டது. இதில் dream 11 நிறுவனம் 222 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றியுள்ளது. இந்த dream 11 நிறுவனத்துடன் டாடா நிறுவனமும், பிரபல ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் நிறுவனமும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here