Home சினிமா விமர்சனம் கோலிவுட் இந்தியன் 2 படம் ரிலீஸ் ? இரண்டு பாகங்களா…

இந்தியன் 2 படம் ரிலீஸ் ? இரண்டு பாகங்களா…

462
0
indian 2
Share

உலக நாயகன் கமல் ஹாஸன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்து ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது. எடிட்டிங் வேலை இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே கிட்டத்தட்ட 5 மணிநேரம் பதிவாகியுள்ளதாம். இதைப் பார்த்து ஷங்கர் உள்ளிட்ட படக்குழு வியந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை நீக்காமல் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம்  என்று ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்புகள் யோசிக்கிறதாம்.
இந்தியன் 2வுக்கே பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதை  இரண்டு பாகங்களாக வந்தால் ரசிகர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை. எனவே  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எதையும் நம்ப முடியாது.
இதற்கு முன்பு  இந்தியன் 2 படம் கைவிடப்படுவதாக ஏராளமான செய்திகள் வெளியானது. ஆனால்  அதெல்லாம் இல்லை என்று லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதம் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே செட் போட்டு சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது தான் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் பிரச்சனையினால் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here