Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் இனி அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 59 ! தமிழக அரசு அதிரடி முடிவு…

இனி அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 59 ! தமிழக அரசு அதிரடி முடிவு…

556
0
EpS
Share

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை இயற்றியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை தமிழகத்தில் அரசுப் பணிகளில் உள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்படத் தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயதையும் 59 ஆக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Govtதற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர்களிடம்  தரப்பில் சொல்லப்படுவது கொரோனா நேரத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஓய்வு பெறுபவர்களும் உள்ளனர். இந்தக் கடினமான சூழலில் அரசு ஊழியர்களை ஓய்வு பெற அனுமதித்தால் மக்கள் பணியில் பாதிப்பும் சிரமும் ஏற்படும் என்பதால் தான் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இது உண்மையான காரணமாக எனத் தெரியவில்லை,  இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறவர்கள் எண்ணிக்கை தோராயமாக 25,000 முதல் 30,000 வரை இருக்கும். அந்த ஊழியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய ஓய்வூதியம் 5,100 கோடி ரூபாய். கொரோனா நேரத்தில் இந்தப் பணத்தைத் தற்போதைக்கு தராமல் தள்ளிப்போடுவதுதான் அரசின் நோக்கம் எனக் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here