Home செய்திகள் இந்தியா இந்தியாவில் Google நிறுவனம் முதலீடு ! சுந்தர் பிச்சை அறிவிப்பு..

இந்தியாவில் Google நிறுவனம் முதலீடு ! சுந்தர் பிச்சை அறிவிப்பு..

316
0
sundar pichai
Share

Google for india 2020 என்ற நிகழ்ச்சி ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி YOUTUBE தளம் வாயிலாக நேரலை செய்யப்பட்டது. இந்த விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், Google மற்றும் Alphabet நிறுவனங்களின் CEO -ஆன சுந்தர் பிச்சை மற்றும் Google இந்தியாவின் அதிகாரிகள் என முக்கியமானோர் கலந்து கொண்டனர்.

கொரோனவால் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தற்போது  கொரோனாவால் பரவல் காரணமாக மீளாத் துயரத்தில் மூழ்கியுள்ளது. ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இதனால் இதற்கு உதவும் வகையில் Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 7500 கோடி இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் இந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது : Google நிறுவனம் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.

அவர் கூறியுள்ள முதலீட்டின் படி இந்த முதலீடுகள், பல்வேறு துறைகளில் கூட்டணி அமைப்பது என பல்வேறு முறையில் முதலீடு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த முதலீடுகள் அனைத்தும் இருக்கும் என கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here