Home செய்திகள் இந்தியா தங்கம் விலை சரசரவென குறைந்தது…

தங்கம் விலை சரசரவென குறைந்தது…

309
0
Share

தொடர்ந்து ஒரே வாரத்தில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த வீழ்ச்சி உலக அளவிலிருந்தது. இதனால் பாதுகாப்பு உலக நாடுகள் முழுவதும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால் சில்லரை விலையில் ஆபரணத் தங்கம் விலை 44 ஆயிரம் வரை ஒரு சவரன் விற்பனையானது.

இளம் விஞ்ஞானி பயிற்சி இந்த ஆண்டு இல்லை ! இஸ்ரோ அறிவிப்பு

மீண்டும் பொருளாதார நிலை சற்றே உயிர் பெற்று வருவதால் தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் தற்போது அந்த முதலீட்டுப் பணத்தைப் பொருளாதார நிறுவனங்கள் மேல் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை சற்று குறையத் துவங்கியது. தற்போது 40 ஆயிரத்துக்கும் கீழ் ஒரு சவரன் தங்கம் விற்பனை ஆகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 39,800 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் குறைந்து 39381 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலையில் இன்று 51 ரூபாய் குறைந்து 4924 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here