Home செய்திகள் இந்தியா எழுந்து வா பாலு ! இளையராஜாவின் உருக்கமான ட்ரெண்டிங் வீடியோ..

எழுந்து வா பாலு ! இளையராஜாவின் உருக்கமான ட்ரெண்டிங் வீடியோ..

359
0
Share

சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரும் பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனோ தோற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நேற்று அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என அனைத்து திரையுலகினரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனிடம் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வந்தனர். நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் பெரும் சோகத்தில் மூழ்கினர். தற்போது இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நெருங்கிய நண்பரும் மிகப்பெரிய இசையமைப்பாளருமான இளையராஜா அவர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நலம் குறித்து ஆறுதல் கூறும் வகையிலும் ரசிகர்களுக்கு மன நிம்மதி அளிக்கும் வகையிலும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சுவரங்கள் இசையை விட்டுப் பிரிவதில்லை. அதே போல் உனக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பும் பிரியக் கூடாது. நாம் என்ன தான் சண்டை போட்டாலும் நம்முடைய நட்பைப் பற்றி நம் இருவரும் தெரியும். போதும்! எழுந்து வா பாலு… உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று உருக்கமாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here