Home ஆன்மீகம் விநாயகர் சதுர்த்தி எள்ளுருண்டை வீட்டிலேயே செய்யலாம்….

விநாயகர் சதுர்த்தி எள்ளுருண்டை வீட்டிலேயே செய்யலாம்….

595
0
Share

விநாயகர் சதுர்த்தி என்றாலே எள்ளுருண்டை இல்லாமல் கொண்டாட முடியாது. ஏனென்றால் விநாயகருக்கு எள்ளுருண்டை என்றால் அவ்வளவு பிரியம். அதே போல் தற்போது விநாயகர் சதுர்த்தி வருவதால் அனைவரும் எள்ளுருண்டையைக் கடையில் வாங்கி படையலிடுவர். ஆனால் அந்த காலத்திலிருந்தே வீட்டிலேயே எள்ளுருண்டை பிடித்து விநாயகருக்குப் பூஜித்துப் படையலிடுவர்.

எனவே கடையில் வாங்கும் எள்ளுருண்டையில் கலப்படமும் தங்கள் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களும் இருக்க வாய்ப்புள்ளது. கீழே வீட்டிலேயே ஹெல்தியான எள்ளுருண்டை செய்யும் முறையைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்களே செய்து பாருங்களேன்…

தேவையான பொருட்கள் :
எள் = 1 கப்.
துருவிய வெல்லம் = ஒரு கப்

செய்முறை :
சுத்தப்படுத்தி எடுத்து வைத்துள்ள எள்ளை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் வறுக்கும் போது சில நேரம் வெடிக்கவும் செய்யலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். வருத்த எள்ளைச் சூடு குறையும் வரை ஆறவைத்து மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். ஆனால் முழுவதும் பொடியாகக் கூடாது ஒன்றும் பாதியாக இருக்க வேண்டும்.

அதனுடன் துருவி எடுத்து வைத்துள்ள வெள்ளத்தை அரைத்த எள்ளுடன் கலந்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்பு இந்த பொடியை உருண்டையாகப் பிடித்து வைக்கவும். இதில் சிறிதளவு நல்லெண்ணெய்யையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் என்னை அதிகமாகக் கூடாது உருண்டை ஆகும் அளவிற்கு இருந்தால் போதும். அதற்குப் பதில் நல்லெண்ணெய்யை கைகளில் வைத்துக் கொண்டு உருண்டை பிடிக்கலாம் இப்படிச் செய்தால் எளிதில் எள்ளுருண்டை தயாராகிவிடும்.

வீட்டிலேயே செய்த எள்ளுருண்டை வைத்து விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்குப் படையலிட்டு விநாயக சதுர்த்தியைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here