Home செய்திகள் இந்தியா 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க காசு கண்டுபிடிப்பு…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க காசு கண்டுபிடிப்பு…

346
0
Share

1100 ஆண்டு பழமை வாய்ந்த தங்க காசுகள் கண்டெடுப்பு. அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது கண்டுபிடிக்கப்பட்டதால் சோதனையில் இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tiktok அம்சத்தைப் போன்றே புதிய செயலி…

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே குடியிருப்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த போது களிமண்ணால் செய்யப்பட்ட பானை ஒன்றின் உள்ளே 100க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இந்த தங்க காசுகள் இஸ்லாமிய அடையாளங்களால் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை தொல்லியல் துறைக்கு பரிசோதனை செய்ய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு இந்த தங்க காசுகளை சோதித்து ஆராய்ச்சி செய்த தொல்லியல் நிபுணர்கள் இந்த காசுகள் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், முந்தைய இஸ்லாமிய மன்னர்கள் வெளியிட்ட நாணயமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தற்போது மேலும் ஏதாவது அரியவகை தங்கப் புதையலும் அல்லது இஸ்லாமியர்கள் வாழ்ந்த போது பயன்படுத்திய பொருட்கள் ஏதாவது உள்ளனவா என்று அகழ் ஆராய்ச்சியை நடத்தி வருகின்றனர்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here