Home செய்திகள் இந்தியா ஊரடங்கை மீறியதாக பிடிக்கபட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் திருப்பிதர முடிவு !

ஊரடங்கை மீறியதாக பிடிக்கபட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் திருப்பிதர முடிவு !

581
0
tripathi
Share

ஊரடங்கு உத்தரவை மீறி வெளிய சுற்றியவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் வழங்க முடிவு. உரிய ஆவணங்களுடன் வந்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என D.G.P திரிபாதி அறிவித்துள்ளார்.

144 உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24 முதல் நேற்று வரை 1.94 லட்சம் வழக்குகளும்,2.08 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் இதுவரை 90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வழக்கு செய்யப்பட்ட 1.80 லட்சம் வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்க முடிவு.curfew

இதைப் பற்றி D.G.P திரிபாதி கூறியிருப்பது :

தினமும் காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை உரிய ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை என  வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழங்கப்படும்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட வரிசையின் அடிப்படையில் வாகன உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் அலைபேசி வழியாகவும் அழைக்கப்படுவர்.

அவ்வாறு வருபவர்கள் வாகன உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புக் போன்றவற்றின் அசல் மற்றும் நகல்களை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

அவைகள் சரிபார்க்கப்பட்டு வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here