Home செய்திகள் இந்தியா கொரோனாவால் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நெருக்கடி..! வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வழங்குவதில் சிக்கல்….

கொரோனாவால் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நெருக்கடி..! வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வழங்குவதில் சிக்கல்….

375
0
Share

தற்போது கொரோனா  (கோவிட் – 19) அச்சத்தினால் மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுய ஊரடங்கு உத்தரவினால் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இதனை மீறி பலர் வெளியில் வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் அதிகமாக டேட்டாவை உபயோகிக்கின்றனர். இதனால் நெட்வொர்க் நிறுவனங்கள் பயங்கர சிக்கலைச் சந்தித்துள்ளனர்.Network problem

அரசு, தனியார் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய அவர்கள் பெரும்பாலும் மொபைல் தரவைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் அரசு , தனியார் மற்றும் ஐ.டி துறையினர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். இவ்வாறு பணிபுரிபவர்கள் அவர்களது மொபைல் டேட்டாவை பயன்படுத்தி அவர்களது பணியைச் செய்கின்றனர்.

அதே சமயம் வீட்டில் இருக்கும் அணைத்து மக்களும் பாடல்கள் கேட்பது,பொழுதுபோக்கிற்காக அவர்களது மொபைல் டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

இதனால் டேட்டா வேகம் குறைந்து வருவதாக மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. “கடந்த சில வாரங்களில், மொபைல் டேட்டா பயன்பாடு 30 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று செல்போன் கூட்டமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறினார்.Rajan

இந்த நிலைமை தொடர்ந்தால், டேட்டா வேகம் குறையும். இதனால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு  சிக்னல் வேகம் குறைவாகக் கிடைக்கின்றது, இதனால் அவர்கள் மிகுந்த வருத்தமடைகின்றனர். இந்த டேட்டா வேகத்தை அதிகப் படுத்த தற்போது சுய ஊரடங்கு உத்தரவினால் டெக்னிசியன்கள் குறைவாக உள்ளனர்.

ஆகவே தேவையான அளவிற்கு மட்டுமே டேட்டாவினை உபயோகியுங்கள். இதனால் அனைத்து மக்களும் டேட்டாவினை தேவையான அளவிற்கு பயன்படுத்துங்கள் என்று நெட்வொர்க் நிறுவனங்கள் கூறுகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here