Home செய்திகள் இந்தியா சென்னை புறநகர் ரயில்கள் சேவை ! மீண்டும் அக்டோபர் 7 முதல் தொடங்குகிறது…

சென்னை புறநகர் ரயில்கள் சேவை ! மீண்டும் அக்டோபர் 7 முதல் தொடங்குகிறது…

318
0
Share

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வகையான ரயில் சேவைகளும், பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் வகையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக பலகட்டடமாக நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அன்லாக் செயல்முறையின்படி பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டன. சென்னை உள்பட இந்தியா முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கிய அம்சமாக, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் , மாநிலம் முழுவதும் பிற பகுதிகளுக்கும், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அத்துடன், சென்னை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் சேவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் பயணிகள் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.

சென்னையில் புறநகர் ரயில் சேவை மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here