Home செய்திகள் இந்தியா மத்திய அரசு அதிரடி உத்தரவு ! வாடகை வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி…

மத்திய அரசு அதிரடி உத்தரவு ! வாடகை வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி…

352
0
terent
Share

உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு (144) பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தின் போது வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக் கூடாது எனவும், வீட்டை காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது எனவும்  மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அணைத்து மாநில அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் 1 மாதத்திற்கான வாடகையை வாங்கக் கூடாது என்றும் அவர்களை வலுக்கட்டாயமாக காலி செய்ய வலியுறுத்தக்கூடாது எனவும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Central Government

மேலும் அவர்கள் வேலை செய்த நிறுவனங்களிடம் இருந்து ஊதியத்தைப் பெற்றுத் தர  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கைக் காரணம் சொல்லி சம்பளம் பிடித்தம் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வழியில் தத்தளிப்பவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் அமைத்து அவர்களை முறையாக 14 நாட்கள் தனிமைப் படுத்தி பின்னர் அந்தந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

இதனை மீறி வாடகை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here