Home செய்திகள் இந்தியா SRM கல்வி நிறுவனங்களில் JEE நுழைவுத்தேர்வு ரத்து..

SRM கல்வி நிறுவனங்களில் JEE நுழைவுத்தேர்வு ரத்து..

357
0
SRM
Share

கொரோனா காரணமாக SRM கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இந்த ஆண்டு சேர்க்கை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.

SRM கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில்  சேருவதற்காக ஒவ்வொரு கல்வி ஆண்டும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது 127 நகரங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் துபாய், தோஹா, மஸ்கட், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காலம் என்பதாலும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெளி நாட்டில் இருப்பவர்கள் வந்து தேர்வை எழுதுவது என்பது வாய்ப்பு குறைவாக இருப்பதாலும், மாணவர்கள் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த தேர்வை ரத்து செய்வதாக SRM பல்கலைக்கழகம் தற்போது JEE நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. அது மட்டுமன்றி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், போன்ற படங்களை வைத்தும் இந்த கல்வி படிப்பினை வைத்தும் கணக்கிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே VIT பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here