Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் வரை மிகுந்த பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வரும் IPS...

மக்களுக்கு சேவை செய்வதிலிருந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் வரை மிகுந்த பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வரும் IPS அதிகாரி

1626
0
Rajesh kanna IPS
Share

புளியந்தோப்பு மக்கள் மத்தியில் கொரோனா தொற்று காலங்களில் மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் வரை மிகுந்த பாராட்டுகளைத் தொடர்ந்து பெற்று வரும், தமிழகத்தில் நல்ல காவலர்கள் உண்டு என்பதற்கு இவர்கள் போன்ற அதிகாரிகளே உதாரணம் புளியந்தோப்பு சரக ஆணையாளர் திரு. ராஜேஷ் கண்ணன் IPS அவர்கள்.

கடந்த 21.06.2020-ம் தேதி அன்று புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் தெருவில் உள்ள இறைச்சி வியாபாரிகளின் சங்கத்தின் அலுவலகத்தின் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.61.50 லட்சத்தை பூட்டை உடைத்துத் திருடி உள்ளனர்.

புளியந்தோப்பு சரகம் ஆணையாளர் திரு. ராஜேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், ஏழு நாட்களில் இவ்வழக்கில் எவ்வித தடையமும் இல்லாமல், புளியந்தோப்பு P1 போலீசார் விசாரணை மேற்கொண்டு பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை செய்தனர். அதன் பலனாக இன்று 29.06.2020 ஆம் தேதி அதிகாலை குற்றவாளிகளைப் பிடித்து சுமார் 40லட்சம் பணத்தை ரொக்கமாக காவல்துறையினர் கைப்பற்றினர்.

இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்த தனிப்படை காவல் ஆய்வாளர் திரு.கு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனிப் படை காவலர்கள் குமரேசன் குமார், பூமிநாதன் நித்தியானந்தம், ஊர்க்காவல் படை வீரர்கள் திரு. செல்வமணி பார்த்திபன் ஆகியோரை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதிவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

கொரோனா நோய் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் திறமையாக செயல்பட்டு கைது செய்து பணத்தை மீட்ட புளியந்தோப்பு காவல்துறைக்குப் புளியந்தோப்பு இறைச்சி சங்கத்தினரும் நன்றியைத் தெரிவித்தார்கள்.

இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் CAA மற்றும் NRC போராட்டம் காலங்களில் தமிழகத்திலேயே புளியந்தோப்பு பகுதியில் எந்தவித சலசலப்பும் அவதூறு பேச்சுகளும் இல்லாமல் இஸ்லாமிய மக்களிடம் அன்பாகப் பேசி போராட்டத்தைத் திரும்பப் பெறச் செய்தது.

தட்டாங்குளம் பகுதியில் கொரோனா தொற்று 96 நபர்களுக்கு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை மளிகை பொருள் வழங்குவது பணம் எடுக்கும் ஏடிஎம் மிஷின் அப்பகுதியில் நிறுத்தி வைத்தது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து சேவைகளைச் செய்வதில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றவர்.

தவறு செய்பவர்களுக்குத் துணை போகாதவர் புளியந்தோப்பு ஆணையாளர் திரு. ராஜேஷ்கண்ணன் IPS அவர்கள்.

இப்படிப்பட்ட நேர்மையான காவல் அதிகாரிகளின் மூலம் ஒரு சில நபர்கள் தாங்கள் நினைக்கும் காரியம் நிறைவேறவில்லை எனும் காரணத்தினால் நேர்மையான அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது சில தினங்களாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

தவறான செய்தி நம் சமுதாய முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here