Home செய்திகள் இந்தியா கொரோனாவை தொடர்ந்து அம்பன் ! தமிழகம் தப்பிக்குமா ?

கொரோனாவை தொடர்ந்து அம்பன் ! தமிழகம் தப்பிக்குமா ?

434
0
Share

வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சனிக்கிழமை  புயலாக மாறியது. இந்த புயலுக்கு தாய்லாந்து இட்டுள்ள பெயர்  ‘அம்பன்’. இதனால் அடுத்த சில  நாட்களுக்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
cyclone
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அம்பன் என முன்னரே பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை எனத் தெரிவித்து பயத்தைப் போக்கியுள்ளனர்.
ஆனால் இந்த அம்பன் வரும் 20ம் தேதி, மேற்கு வங்கம் – வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னத்தால், ஒடிசாவில் இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வசிப்போருக்கு, மாற்றுத் தங்குமிடங்கள் அதிவேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தடுப்புப் பணிகளுடன், புயல் சேதத்தையும் ஒடிசா எதிர்கொள்ளும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here