Home செய்திகள் இந்தியா Airtel,Vodafone  சேவைகள் நிறுத்தம் ! TRAI  -யின் அதிரடி முடிவா ? TRAI -க்கு எதிராக Airtel,Vodafone…

Airtel,Vodafone  சேவைகள் நிறுத்தம் ! TRAI  -யின் அதிரடி முடிவா ? TRAI -க்கு எதிராக Airtel,Vodafone…

344
0
airtel
Share

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் Airtel மற்றும் Vodafone IDEA நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு சில பிரீமியம் சேவைகளை வழங்குகிறது. அதன் படி தம் சந்தாதாரர்களுக்கு அதி வேக இணையத்தை வழங்கவும் இந்தத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சேவையை நிறுத்துமாறு கடந்த திங்கட்கிழமை அன்று உத்தரவு பிறப்பித்தது TRAI. ஏனென்றால் அதிக தொகை கொடுப்பவர்களுக்கு மட்டும் அதிவேக சேவையை வழங்கும் நீங்கள், சாதாரண திட்டம் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பான சேவையை வழங்குவீர்கள் என்று கேள்வி எழுப்பியது TRAI. அதனை அடுத்து இந்த பிரீமியம் சேவை திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறபித்தது.

TRAIஆனால் தற்போது பிரீமியம் சேவைத் திட்டங்களை நிறுத்தி வைக்கக் கூறிய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI  அறிவித்த உத்தரவிற்கு எதிராக VODAFONE IDEA  தொலைத்தொடர்பு  நிறுவனம் டிடிஎஸ்ஏடி (Telecom Disputes Settlement and Appellate Tribunal TDSAT) தாக்கல் செய்துள்ளது. இதே போல் AIRTEL  நிறுவனம் விரைவில் சட்டப்படி வழக்கு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

TRAI  மீது இந்த  நிறுவனங்கள் வழக்குத் தாக்கல் செய்திருப்பது ஒரு மிகப்பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆயினும் TRAI  இதற்கு எந்த ஒரு மறுபரிசீலனை செய்யவும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here