Home செய்திகள் இந்தியா நடிகர் விக்ரம் தற்போது கர்ணன் வேடத்தில் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து...

நடிகர் விக்ரம் தற்போது கர்ணன் வேடத்தில் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து படங்கள் வெளியாகியுள்ளது

952
0
Share

சீயான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் அதன் படப்பிடிப்பு  கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி விக்ரம் கோப்ரா என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்களில் நடிக்கிறார்.Vikram
மேலும் 2019 -ல் ஆரம்பத்திலேயே விக்ரம் நடிப்பில் மகாவீர் கர்ணா என்ற வரலாற்றுப் படம் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்றது. 2019 கடைசியில் இது வெளிவரும் என்று அறிவித்தனர். ஆனால் தொடர் தாமதத்தால் இன்னும் வெளியீடு தேதி வெளிவராமல் உள்ளது.
ஆர்எஸ் விமல் இயக்கும் இப்படம் எப்போது வெளிவரும் என ஆவலுடன் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விக்ரமின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துக் கூறும் விதமாகக் கர்ணன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்களை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் கர்ணன் தோற்றத்தில் இருப்பது அந்த படங்களில் காட்டப்பட்டுள்ளது. அந்த படம் தான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here