Home டெக்னாலஜிஸ் AUTOMATION ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்கேம் மற்றும் ஸ்மார்ட் பல்பு!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்கேம் மற்றும் ஸ்மார்ட் பல்பு!

470
0
Share

ரியல்மி நிறுவனத்தால் புதிய ஸ்மார்ட் கேம் 360, ஸ்மார்ட் பல்ப் போன்றவை அறிமுகம் செய்யப்படவுள்ளது, இந்த இரண்டு தயாரிப்புகளுமே IFA 2020 இல் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ரெட்மி, சாம்சங் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக ரியல்மி நிறுவனமும் பல எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிதாக ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் பல்பு என இரண்டு அட்டகாசமான கேட்ஜெட் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல்மி ஸ்மார்ட் கேம் 360-யின் சிறப்பம்சங்கள்:

ரியல்மி நிறுவனம் முதன் முதலாகப் பாதுகாப்பு அம்சமாக வீடுகளைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேம் 360 கேமராவை உருவாக்கியுள்ளது. இது 1080P ஃபுல் HD வீடியோ ரெக்கார்டிங் கேமரா ஆகும்.
மேலும், வைட் ஆங்கிள், நாய்ஸ் கேன்சலேசன் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது. 360 டிகிரி கோணத்தில் இயங்குவதற்காக கிம்பள் மெக்கானிசம் உள்ளது. இதனால் மனிதர்கள், மற்றும் அசைவை அளிக்கும் மற்ற பொருட்களைத் துல்லியமாகக் கணிக்கிறது.

128 GB ஸ்டோரேஜ், இரு வழியில் பேசுவதற்கான அம்சம், இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பம் போன்றவை உள்ளது. இதனால், சூரியன் மறையும் போது, தானாகவே இன்ஃப்ரா ரெட் ஆன் செய்து, இரவிலும் வீட்டைத் துல்லியமாகக் கண்காணிக்கிறது.

உடலுக்குத் தேவையான ஆரோக்கிய சத்துக்கள் கொண்ட காய்கறி – தேங்காய்ப்பால் ஸ்ட்யூ..

மேலும் IFA 2020 நிகழ்ச்சியில் ரியல்மியின் ஸ்மார்ட் பல்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பு தயாரிப்பில் சுமார் 16 மில்லியன் நிறங்கள் வரை ஒளிரும் தன்மை உள்ளது. பல்பு வெட்டும் தன்மை அதாவது பிளிக்கரிங் குறைபாடு இதில் இருக்காது. ஃபிளேம் ரெசிஸடெண்ட் மெட்டிரியலால் இந்த பல்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 13 வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் என்று கூறப்படுகிறது. வாய்ஸ் கமெண்ட் கன்ட்ரோல் உள்ளதால், சாதாரணமாக நாம் பேசுவதன் மூலமாகவே பல்பை இயக்க முடியும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here