Home செய்திகள் இந்தியா உலகின் மிகப்பெரிய திமிங்கலம் ! 100 ஆண்டுகளில் மூன்றாவது முறை..

உலகின் மிகப்பெரிய திமிங்கலம் ! 100 ஆண்டுகளில் மூன்றாவது முறை..

653
0
Share

உலகிலேயே மிகப்பெரிய திமிங்கலம் இதன் எடை 100 டன் வரை இருக்குமாம். இதன் இதயம் மட்டும் ஒரு காரின் எடை அளவிற்கு இருக்கும் என்று புகைப்படத்தை வெளியிட்டு மெய்சிலிர்க்கும் புகைப்படக் கலைஞர்.

இதற்கு முன்பு 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டில் கேப் சோலேண்டர் பகுதியில் நீலநிற மிகப்பெரிய திமிங்கலத்தை பார்த்ததாகக் கடல் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எடை கிட்டத்தட்ட 100 டன் வரை இருக்கும் என்று அவர்கள் செய்த ஆய்வில் பதிவு செய்துள்ளனர். அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அந்த திமிங்கலத்தின் புகைப்படங்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.

ஆம், சிட்னியைச் சேர்ந்த மிகப்பெரிய புகைப்படக் கலைஞர் சியான் கே என்பவர் படம்பிடித்துள்ளார். இந்த மிகப்பெரிய திமிங்கலத்தை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.

நான் சிங்கிளா இருப்பதையே விரும்புகிறேன் – ராஷ்மிகா..

கடலின் மேற்பரப்பிலிருந்தவாறே படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது மட்டுமில்லாமல் அந்த பதிவில் எந்த இடத்தில் படம் எடுப்பது என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை. மிரண்டு போய் படம் எடுத்தேன் என்றும் பதிவு செய்துள்ளார். இவ்வாறு தன் அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

அதன் நாக்கு மட்டும் ஒரு யானையின் எடைக்கு ஈடாகவும், அதன் இதயம் ஒரு காரின் எடை ஈடாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here