Home செய்திகள் இந்தியா 50 ஆயிரம் கோடியில் சிறப்பு கடன் உதவி – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

50 ஆயிரம் கோடியில் சிறப்பு கடன் உதவி – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

552
0
Rbi sakthi kandha dass
Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் பேசியிருப்பது, வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என ஆர்பிஐ உறுதியளித்துள்ளது; இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வங்கிகள் செயல்படுகின்றன.

கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி மிகவும் கவனித்து வருகிறது.

RBI Governer

இணைய பயன்பாட்டில், ஆன்லைன் பரிவர்த்தனை பயன்பாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. மார்ச் மாதத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில்  பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

பிப்-16 முதல் மார்ச் 27 வரை ஜி.டி.பி.யில் 3.2 சதவிகிதம் அளவுக்கு பணம் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி கொண்டுள்ளது, அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளில் இது அதிகமாகும்.

கொரோனா தொற்றால் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்களான அரிசி, கோதுமை போதுமான கையிருப்பு உள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிதிச்சுமையை குறைக்கவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும். நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்படும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here