Home செய்திகள் இந்தியா கேரளாவில் ஆன்லைன் மதுவிற்பனை 250 கோடி வசூல் …

கேரளாவில் ஆன்லைன் மதுவிற்பனை 250 கோடி வசூல் …

862
0
Tasmac Updates
Share

மே 28 முதல் கேரளாவில்  ஒரே வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. BevQ செயலியில் ஒருநாளைக்கு 4.50 லட்சம் பேர் பதிவு செய்து இ- டோக்கன் பெற்று மது வாங்கியுள்ளனர். கேரளாவில் ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து  அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. கடைகளைத் திறந்தால் கூட்டம் அடக்க முடியாமல், நோய் பரவும் அபாயம் உருவாகும் என்பதால் மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசு தயங்கியது.
அதற்குத் தீர்வு காண அதிகாரிகள் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாகச்  செய்தனர். இதற்காக ஒரு தனியார் நிறுவனம் மூலம் மொபைல் ஆப் ஒன்றைத் தயாரித்தனர். BevQ என்ற இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர்-ல் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் வாடிக்கையாளர்கள்  மது கேட்டுப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
BevQ செயலி-க்கு கூகுள் பிளே ஸ்டோர் கடந்த மே 26ம் தேதி அனுமதி வழங்கியது. இந்த செயலியை பயன்படுத்தி இன்று முதல் கேரளாவில் மது பானங்கள் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர் இந்த செயலியில் பதிவு செய்ததும் அருகில் உள்ள கடையில் மது வாங்குவதற்கான டோக்கன் அவர்களுடைய ஆப்-ல் தோன்றும். அதனை அந்த கடையில் காண்பித்து வாடிக்கையாளர் மது வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை 3 லிட்டர் அளவு வரை மதுபானங்களே வழங்கப்படும். அதே நபர் அடுத்த 4 நாட்களுக்கு இந்த செயலி பயன்படுத்தி மது வாங்க இயலாது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு செய்து மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் எனக் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் மதுக்கடைகளில் தேவையின்றி கூட்டம் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆன்லைன் விற்பனை தொடங்கிய ஒரே வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here