Home செய்திகள் இந்தியா 3 நிமிடத்தில் 100% சார்ஜ் ! அதிசயம் ஆனால் உண்மை..

3 நிமிடத்தில் 100% சார்ஜ் ! அதிசயம் ஆனால் உண்மை..

372
0
realme
Share

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா ! ஆம், 3 நிமிடத்தில் அதிவேக சார்ஜிங் செய்யும் புதிய சார்ஜருடன் மொபைல் போனை உருவாக்குகிறது ரியல் மீ நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நவீன ஸ்மார்ட் போன் உலகத்தில் 4000mah பேட்டரி முதல் 6000 mah பேட்டரி வரை உள்ள போன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் போது சார்ஜ் வேகமாக இறங்கி விடுவது நமக்குச் சற்று எரிச்சலை உண்டாக்குகிறது.

இதற்கு மாற்றாக மக்கள் அனைவருமே வேகமாக சார்ஜ் ஆகும் வகையிலும் அதிக மெகாபிக்சல் உடன் கூடிய ஸ்மார்ட் போனையும் தான் விரும்புகின்றனர். ரியல் மீ நிறுவனம் வேகமாக நேரத்தில் சார்ஜ் ஏறும் புதிய சார்ஜர் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அப்படி என்றால் 3 நிமிடத்தில் 4000mah பேட்டரி வேகமாக சார்ஜ் ஆகுவதுடன் ஒரு மொபைல் போன் தற்போது வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது போன்ற பேட்டரி மற்றும் சார்ஜர் கேமரா மெகாபிக்சல் இதை வைத்துத்தான் இந்த oppo , realme இரண்டு நிறுவனங்களுமே சந்தையில் வியாபாரத்தைத் தன்வசம் வைத்துள்ளது. எனவே இந்த புதிய மாடல் வெளியாகுமா என்ற இன்னும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரவில்லை. ஆனால் நம்பகத்தகுந்த செய்திகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறுகிறது.

oppo, realme இந்த இரண்டு நிறுவனங்களுமே சீன நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here