Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் நிலவைச் சுற்றிக் காட்ட நாங்க தயார்! பயணிக்க நீங்க தயாரா? ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

நிலவைச் சுற்றிக் காட்ட நாங்க தயார்! பயணிக்க நீங்க தயாரா? ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

326
0
Share

சுற்றுலாப் பயணிகளை விண்ணுக்கு அழைத்துச் சென்று நிலவைச் சுற்றிக் காட்டும் வகையில் அமைந்த புதிய திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்னும் கனவோடு இருக்கும் நபர்களைப் பெரிய ஃபால்கன் ராக்கெட் (BFR) மூலமாக வானுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அனுமதி பெற்றுள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி போக்குவரத்து நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

இந்தப் பயணத் திட்டம் தொடர்பான விரிவான தகவல்களை வரும் வாரத்தில் இந்நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

மின்சாரக் கார் தாயாரிக்கும் நிறுவனமான தெஸ்லாவின் (Tesla) தலைமைச் செயல் அதிகாரியான எலன் மஸ்க் (Elon Musk) , விண்வெளிப் போக்குவரத்துக்காகத் தொடங்கிய நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகும். இதனுடைய தலைமையகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது தொடர்பாக இந்நிறுவனம் இது போன்ற அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு விண்வெளி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here