Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் நானும் கோடீஸ்வரி ஆயிட்டேன்!!!-கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கௌசல்யா.

நானும் கோடீஸ்வரி ஆயிட்டேன்!!!-கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கௌசல்யா.

542
0
கோடீஸ்வரி கலர்ஸ் தமிழ்
Share

பிரபல தமிழ் சேனலானா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது, இதில் மதுரையை சேர்ந்த மாற்று திறனாளியான கௌசல்யா ஒரு கோடி ரூபாய் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
Colors Tamil

கோடீஸ்வரி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெண்கள் மட்டுமே பங்குபெற அனுமதிக்கப்படும் ஒரு வினாடி வினா வகை நிகழ்ச்சி ஆகும்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் ராதிகா சரத்குமார் கேட்கும் 15 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட கௌசல்யா என்ற மதுரையைச் சேர்ந்த பெண் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசாக வென்றுள்ளார்.இவர் காது கேட்காத,வாய் பேச முடியாத ஒரு மாற்றுத் திறனாளி ஆவர்.இந்த நிலைமையிலும் தனது சைகை மொழி திறமையினால் ராதிகா சரத்குமார் கேட்கும் கேள்விகளை அவரின் முக அசைவுகளை மட்டுமே வைத்துப் புரிந்து கொண்டுஅனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

kousalya kodeeswari

இந்த இமாலய வெற்றிக்குப் பின் கோடீஸ்வரி  கௌசல்யா, “கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெருமையாக உள்ளது” என்றும் “நான் ஒரு கோடீஸ்வரி என்று அனைவரிடமும் கூறுவேன்” என்றும் கூறினார்மேலும் தனது குடும்பத்தார் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

கோடீஸ்வரி கௌசல்யா வெற்றி பெற்ற பணத்தில் இயலாதவர்களுக்கும், இயலாத நாகர்கோவிலில் உள்ள தான் பயின்ற காது கேளாதோர்,வாய் பேசாதோர் பள்ளிக்கும் உதவி செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.மேலும் சொந்தமாக வீடு வாங்க விரும்புவதாகவும்,இத்தாலி அல்லது ஸ்விட்சர்லாந்து ஏதேனும் ஒரு நாட்டிற்குச் செல்ல விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

colours tamil kodeeswari kousalya

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிலேயே முதல் முறையாக ஒரு கோடி வென்றது கௌசல்யாதான்,மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையினால் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும்ஒரு பெண் கடினமாக உழைத்து இன்று கோடீஸ்வரி ஆனது பெருமையாக உள்ளது என்றும் இவரின் வெற்றி பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் என்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராதிகா சரத்குமார் கூறினார்.

இவர் இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல தனது படிப்பிலும் திறமைசாலி என்பதை நிரூபித்துள்ளார்அவர் பி.எஸ்சி (பேஷன் டெக்னாலஜியில்) பல்கலைக்கழகத்திலேயே முதலிடமும்தகவல் தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி மற்றும் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.தற்போது மதுரை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் கௌசல்யாவிற்குபாலமுருகன் என்பவருடன் திருமணமாகி அபினவ் என்ற ஒரு வயதுக் குழந்தை உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here