Home கட்டுரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவீன ஏசி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவீன ஏசி பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

226
0
Share

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங் களில் நவீன ஏசி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முதல்கட்ட மாக ஈரோடு – சென்னை, கோவை – ராமேஸ்வரம் இடையே இயக்க வுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகள் படிப்படியாக நீக்கப்பட்டு, புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வருகின்றன. பயணிகளைக் கவ ரும் வகையில் ஏசி பேருந்துகள், கழிப்பறை வசதி கொண்ட பேருந் துகள், சொகுசு பேருந்துகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளுக்கு பயணி கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், மேலும் சில நவீன ஏசி விரைவு பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கப்படவுள்ளன. அந்த வகை யில் கோயம்புத்தூர் அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு 10 ஏசி விரைவு பேருந்துகள் அளிக்கப்படவுள்ளன. இதில் 3 பேருந்துகள் தயாரிக் கப்பட்டு கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்திடம் தற் போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஈரோடு – சென்னை இடையே ஒரு பேருந்தும் கோவை – ராமேஸ்வரம் இடையே 2 பேருந்து களும் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகள் கூறிய தாவது: பயணிகளைக் கவரும் வகையில் புதிய வகை ஏசி பேருந் துகளை இயக்கி வருகிறோம். தற் போது, 3 பேருந்துகள் வந்தடைந் துள்ளன. வரும் தீபாவளி பண்டி கைக்குள் மற்ற 7 பேருந்துகளும் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம். இருக்கைகள் 3+2 என்ற வரிசையில் இருக்கும். தற்போதுள்ள ஏசி பேருந்துகளின் கட்டணத்தை விட, இந்த பேருந்துகளில் கட்டணம் சற்று குறைய வாய்ப்புள்ளது. பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here