Home செய்திகள் இந்தியா சென்னை கடலுக்குள் மூழ்கும்!-எச்சரிக்கும் ஆய்வுகள்

சென்னை கடலுக்குள் மூழ்கும்!-எச்சரிக்கும் ஆய்வுகள்

401
0
high court
Share

கடல் மட்ட உயர்வினால் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தோ இன்னும் சில ஆண்டுகளுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் நேர்ந்திருக்கிறது. அதனால், இந்தோனேசியாவின் தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற அந்நாடு தயாராகிவிட்டது. உலகளவில் இது மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகள் எந்தப் பகுதி கடலுக்குள் மூழ்க இருக்கின்றன என்று தீவிர ஆய்வை மேற்கொண்டுவருகின்றன.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கடற்கரையோரங்கள் ஆபத்தில் இருப்பதாகச் சொல்லும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள், ஆசியாவில் அதிக உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடியதாக ஆறு (சீனா, வங்கதேசம், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து) நாடுகளைப் பட்டியலிடுகின்றன. குறிப்பாக கடல்மட்ட உயர்வால் 2030-லிருந்து 2050-க்குள் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தெற்கு ஆசியாவில் மட்டும் சுமார் 4 கோடி பேர் உள்நாட்டுக்குள்ளாக இடம்பெயர நேரிடும் என்கிறது உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 2019-க்கான உலகளாவிய பேரிடர் அறிக்கை.
அதிலும் இந்தியாவில் அடுத்த முப்பது ஆண்டுகளுக்குள் 3.5 கோடி பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இன்னும் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பருவநிலை மையத்தின் ஆய்வுகளானாது சென்னை கடல்மட்டஉயர்வினால் பெரும் பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கிழக்குக் கடற்கரை சாலைகளில் நிறைந்திருக்கும் பொழுதுபோக்குப் புகலிடங்கள், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், சென்னை உயர்நீதி மன்றம், சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டுத் திடல், கடற்கரையோரக் குடியிருப்புகள், துறைமுகம், அனல்மின் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகள் அடுத்த முப்பது ஆண்டுகளில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகவிருப்பதாக எச்சரிக்கின்றன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here