Home இலக்கியம் உற்றுயிர்த்துத் தேடலாகி-ஜெ.விஜயராணி ஐ.ஏ.எஸ்

உற்றுயிர்த்துத் தேடலாகி-ஜெ.விஜயராணி ஐ.ஏ.எஸ்

662
0
உற்றுயிர்த்துத் தேடலாகி
Share

வாழ்க்கை என்பது குடும்பம்,வீடு,வசதி,வேலை,அந்தஸ்து என்று பல காரணிகளால் ஆனதாக நம்பப்பட்டு வருகிறது.ஆனால்,வாழ்தல் என்பது உணர்வுகளால் ஆனது.உணர்வுகள் நேசத்தாலும்,காதலாலும் உயிரூட்டப்படுபவை.

உற்றுயிர்த்துத் தேடலாகி

காதல் ‘ ஒரு அழகான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அரும்பும் அழகான  புரிதல்,நேசம்எத்தனையோ  பேரைக் சந்திக்கிறோம்,எத்தனையோ பேரைக் கடக்கிறோம்.ஆனால் எவரோ ஒருவரிடத்தில்  தோன்றும்வளரும்…  இந்த அழகான நேசம் எல்லாமே பொதுவாய் நான்கு முடிவுகளுக்குள் கட்டுப்பட்டு விடும்.இனிதாய் இருவரும் கைகோர்த்து வாழ்க்கையை வாழக்கூடும் அல்லது இருவரைச் சார்ந்த உறவுகளின் பொருட்டு நேசம் மரித்துப் போக தாங்கள் எங்கோ வாழக்கூடும் அல்லது இருவரில் ஒருவர் தங்களை சிறைப்படுத்தும் சம்பிரதாய அலங்காரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க மனதை மரணிக்க வைத்துப் பிரிந்து வாழக்கூடும் அல்லது நேசத்தை வாழ வைப்பதாய் சொல்லிவிட்டு,தங்கள் மரணித்துப் போகக்கூடும், இப்படித்தான் கிடக்கிறது காலம்காலமாய் இந்த காதல்,இதைப் பற்றி துளித்துளியாய் கவிதை வடிவில்,என்னைக் கடந்த, நான்    கடந்த,கண்ட, கேட்டவற்றை உணர்ந்தவற்றைக் கவிதைகளாய் எழுத முயன்றிருக்கிறேன்.

பல ஆண்டுகளாக எழுத்து,கவிதை,பாடல்கள் என்று தாம் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்த உணர்வுகளைச் சேர்த்து கவிதைகளாக்க முயன்றுள்ள என் புது எழுத்துக்களைக் கவிதைகளென ஏற்க,தாயென பரிந்தோரின்றி அதனைக் கவிதை மரபுக்குள்ளும் சேர்த்து அணிகலன்கள் செய்து அழகு பார்த்து அணிந்துரை அளித்துள்ள மூத்த கவிஞர் திரு.அறிவுமதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

உற்றுயிர்த்துத் தேடலாகி

ஆட்சிப் பணிக்கான  நிர்வாகத்திறனையும் எழுத்துப் பணியையும் ஒருங்கே,இத்தனை நேர்த்தியாய் இவரால் எப்படிச் செய்ய முடிகிறது என்று என்ன பல நேரங்களில் வியக்க வைத்தவர் என் மதிப்பிற்குரிய மூத்த ஆட்சிப் பணியாளரான ஐயா திரு.இறையன்பு,..., அவர்கள்,என் கவிதைகளை அது எழுதப்பட்ட விதமாகவே புரிந்து கவிதைகளைக் காட்டிலும் அழகாய் வாழ்த்துரை வழங்கியுள்ளார் அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

என் குட்டி குட்டிப் பிடிவாதங்களையும் சின்ன சின்னக் கோபங்களையும்  பொறுத்துக்கொண்டு,இது என் முதல் குழந்தைபோல,அழகாக வடிவமைத்துத் தரவேண்டும்  என்றதற்கு அவ்வளவுதானே செய்து விடலாம் என்று கூறி,நான்      கேட்டுக் கொண்ட வகையில் எல்லாம் மீண்டும் மீண்டும் திருத்தி அமைத்து வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் திரு.மு.வேடியப்பன் அவர்களுக்கும், இந்த நூலைச் சிரத்தையுடன் அழகாய் வடிவமைத்துள்ள திரு.இரா.செந்தில் குமார் அவர்களுக்கும்,இந்த கவிதைத் தொகுப்பை எழுதத் தொடங்கியது முதல் வெளியிடுவது வரை எனக்கு உதவிய அன்புத் தம்பி திரு.அருள்வளன் அரசுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here