Home செய்திகள் இந்தியா இந்தியக் குடியரசு தினம் 2020

இந்தியக் குடியரசு தினம் 2020

1164
0
Share

அனைத்து இந்தியர்களின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியது, பின்னர் ஜனவரி 26, 1950 இல் இந்திய அரசியலமைப்பு நிறுவப்பட்டு, இந்திய இறையாண்மை, மதச்சார்பற்ற, சமதர்ம மற்றும் ஜனநாயக குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களின் அனைத்து போராட்டங்களையும் பிரதிபலிக்கிறது.
republic day speech

குடியரசு தினம் நாடு முழுவதும் முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்திய அரசால் அரசிதழில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நாளை கொண்டாடுவது பெருமையாகவும் மரியாதைக்குரிய விஷயமாகவும் கருதப்படுகிறது.

how many years of republic day 2020இந்த நாளை கொண்டாடும் வகையில் பள்ளிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளும், பேச்சுப்போட்டி, வினாடி வினா மற்றும் இந்தியச் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

republic day 2019

நாட்டின் தலைநகரான புதுதில்லியில் இந்தியாவின் முப்படைகளின் அணிவகுப்புக்கு இந்திய ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். அணிவகுப்பு ராஜ்பாத்தில் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில் முப்படைகளின் ஆயுதப்படைகள் தங்களின் வீரியம், உற்சாகம் மற்றும் ஆயுதங்களைக் காட்டுகின்றன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சாதனை மற்றும் கலாச்சார விளக்க அணிவகுப்பு  நடைபெறும் . இந்த காட்சிகள் அனைத்தும் கொடி ஏற்றும் விழாவிற்கு முன்னதாகவே நடைபெறும்.அணிவகுப்புகள் முடிந்த பின்னர் இந்திய ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார் பின் தேசிய கீதம் பாடப்படும்.

 

why do we celebrate republic dayஇந்த குடியரசு தின நாளில், மக்களை ஊக்குவிப்பதற்கும், தேசியவாதம் மற்றும் பெருமையைத் தேசத்திற்குக் கொண்டு வருவதற்குச் சிறந்த சேவை புரிந்தவர்களும், வீரதீர சாகசம் செய்தவர்களும் விருதுகள் வழங்கி   கௌரவிக்கப்படுகிறார்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here