Home ஆன்மீகம் 2020 ஏப்ரல் மாத ராசி பலன்கள் :

2020 ஏப்ரல் மாத ராசி பலன்கள் :

523
0
april
Share

ஏப்ரல் மாதம் மீனம் மாதமும் மேஷம் மாதமும் இணைந்த மாதம் ஆகும். சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார். ஏப்ரல் மாதம் மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறும் மாதம். இந்த மாதம் மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் கடகம் ராசிக்காரர்கள் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகமும் அதனால் நன்மைகளும் நிறைந்திருக்கும். கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது.

வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா…

மேலும் ஒவ்வொரு ராசிகளின் தனித்த பலன்களை பார்க்கலாம்.

மேஷம்  :

இந்த ராசிக்காரர்கள்  இம்மாதம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில்  சந்தோஷம் கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். சகோதரர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் சிறிது மனக்குழப்பங்கள் ஏற்படலாம்.mesham

தாய்க்கு உங்கள் மீது பாசம் அதிகரிக்கும். வேலையில் உயர்ந்த  பதவிகள் கிட்ட வாய்ப்பு. வீட்டில் உள்ள பெண்களால் கணிசமான லாபம் உண்டாகும். தொழில் துறையில் சில தடங்கல்களுக்கு பின் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். கோவில் பயணங்களால்  வெளியூர் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிட்டும்.

ரிஷபம் :

இந்த மாதம்  நீங்கள் எந்த காரியத்திலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.  மற்றவர்கள் உங்கள் செயல்களினால், உங்களுக்கு எதிராளிகள் ஆகலாம். தன வரவு சற்று சுமாராக காணப்படும். குடும்பத்தில் மனநிம்மதி இன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது சற்று நன்மை தரும். உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.Rishabam

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர். ஆன்மீக சுற்றுபயணம் செல்ல நேரிடும். குழந்தைகள் நன்றாக படிப்பதால், அதன் மூலம் ஆனந்தம் அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்கள் பலரால் பாராட்டி பேசப்படும். தாய் வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் செலவு சற்று  அதிகமாக செய்வீர்கள்.

மிதுனம் :

இம்மாதம்  உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் முழுஅக்கறை தேவை. பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எந்த ஒரு தொழில், செயலிலும் தெளிவு இல்லாமல் இருப்பீர்கள். பணம் சம்பந்தமான விஷயத்தில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்ப்படலாம். இருந்தாலும் அனைத்தும் சமாளிப்பீர்கள்.mithunam

குழந்தைகளினால் செலவுகள் சற்று அதிகரிக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படும். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். தற்போது செலவுகள் அதிகரிக்கலாம், எனவே கட்டுப்பாடு சற்று அவசியம். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் தங்கள் மீது வைத்த தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். ஆரோக்கியம் படிப்படியாக சரியாகும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

கடகம் :

இந்த மாதம் பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஏற்படும் அதில் கவனமாக நடந்து கொள்ளவும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து  செயல்களிலும் சாதாரண பலன்களே ஏற்படும். உங்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அந்த சூழலிலும் உங்களால் அவற்றைச் சிறந்த முறையில் கையாள முடியும்.Kadagam

தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், உங்கள் அணுகுமுறையால் சுமூகமாக்கிவிடுவீர்கள். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கலாம்.

சிம்மம் :

இந்த மாதத்தில் நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்யத்தில் முழு  கவனம் செலுத்தவும். பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக  இருக்கும்.  வெளியூர் பயணங்கள் இந்த மாதம் தள்ளிபோடுவது சிறந்தது. தொலைதூரத் தொடர்புகள் மூலம் புதிய நட்புகளை உருவாக்கலாம்.simmam

இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சில சூழ்நிலைகள், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கையை இழக்காதீர்கள். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும்.

கன்னி :

இந்த மாதம் சுமாரான பலன்கள் தான் கிட்டும். உடல் நலனில் அக்கறை அவசியம். பணவரவு அமோகமாக இருக்கும். சகோதர வழியில் பலன்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் கவனம் அவசியம். வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வேலையில் இடமாற்றங்கள் நேரிடும். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.kanni

மனைவியின் உடல் நிலையில் கவனம் அவசியம்.  சிறுது கஷ்டங்கள் இடையிடையே வந்து போகலாம்.   தொழில் சாதாரணமாக போகும். செய்யும் தொழிலில் லாபங்கள் தடை ஏற்படும். குடும்பத்துடன்  வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனைவியின் உடல் நிலையில் கவனம் தேவை.

துலாம்  :

இந்த மாதம் மிதமான பலன்களே உண்டு. பண வரவு தாராளமாக  இருக்கும். தொழில் துறையில் அதிகபடியான  உழைப்பும், கடுமையான முயற்சியும்   லாபத்தை வாரி வழங்கும். இருந்தாலும் சற்று மந்தமாகவும் காணப்படும். இளைய சகோதரனால் நன்மை கிட்டும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும்.Thulaam

காதல் விவகாரங்களில் இந்த மாதம் சற்று கவனம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் உயர்பதவிகள் வர வாய்ப்பு உண்டு. கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். திடீரென அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிட்டும். தகப்பனாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு வகையில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம் :

இந்த மாதம் பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக அமைய ஒவ்வொரு  சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.  உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் தொழிலிலும் சவால்கள் நிறைந்து காணப்படும்.  வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.viruchagam

பிறருடன் பேசும் போது  அமைதியான முறையில்  நடந்துகொள்ள வேண்டும்.  சமூக வாழ்வில் ஏற்படும்  மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பலத்தை அதிகரிக்கும்.  உங்கள் சக ஊழியர்கள் உங்கள் நம்பகத்தன்மையை சந்தேகிக்கலாம்.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தலாம்.

தனுசு :

இந்த மாதம் மிதமான மாதமாகும். நீங்கள் விரும்பிய ஒரு சொத்தை வாங்குவீர்கள். அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய  தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி நிற்க்கும்.dhanusu

வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளை பெறுவீர்கள்.  உங்களுடைய உற்பத்தித்திறன், நீங்கள் விரும்பிய உயர்ந்த நிலை அல்லது அந்தஸ்தை நீங்கள் அடைவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்பட நேரிடும். நாகரீகமான பொருட்களின்  மேல் அதிக நாட்டம் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

மகரம்  :

இந்த மாதம் சில தெய்வீக வெளியூர் பயணங்கள் போகலாம். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அடிக்கடி தலைவலி, மன குழப்பங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை  ஏற்படலாம் கவனம் அவசியம். உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகலாம்.magaramஇளைய சகோதரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படலாம். தாய் வழி பாசம் உண்டாகும். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். காதல் மலரும். குழந்தைகளும்  நன்மை அடைவார்கள். தெய்வீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாகும்.

கும்பம் :

இந்த மாதம்  சிறுது கடினமான மாதமாகும். தொழில் துறையில் கவனம் தேவைப்படும். நிதி மற்றும் தொழில்துறை தொடர்பான நடவடிக்கைகள் சுமாராகத்தான் இருக்கும். தொலை தூரங்களிலிருந்து உங்களுக்கு வரவேற்பு அழைப்புகள் வரலாம். இதனால் நீண்ட பயணங்கள்  நீங்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்ள நேரிடலாம்.Kumbam

உங்கள் வருவாய், அதிக செலவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும். பணம் போட்டு புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.  உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. உங்களுடைய கவனமற்ற எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். கவனமாக இருங்கள்.

மீனம் :

இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். தைரியசாலிகளாக இருப்பீர்கள். தாயின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா  செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம்.meenam

ஊதிய உயர்வு உங்களுக்குத் திருப்தியை அளிக்கும். விருந்துகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யலாம். ஆன்மீக குருமார்களையும் சந்திக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here