Home செய்திகள் இந்தியா தமிழ்நாடு புறக்கணிப்பா ? தியேட்டர்கள் திறப்பு குறித்து ஆலோசனை – மத்திய அரசு…

தமிழ்நாடு புறக்கணிப்பா ? தியேட்டர்கள் திறப்பு குறித்து ஆலோசனை – மத்திய அரசு…

359
0
Theater opening with heavy restrictions
Share

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று பல மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வரும் செப்டம்பர் 8-ல் புதுடெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

பங்குச்சந்தை கடும் சரிவு … ஒரே நாளில் 700 புள்ளிகள் வீழ்ச்சி !

இந்த அழைப்பில் மேற்குவங்கம், புதுடில்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சில சங்கங்கள் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்து வெளியிடும் தென்னிந்தியத் திரைத்துறைக்கு அவர்கள் அழைப்பு விடுக்காததால் திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. தென்னிந்தியாவிற்கு என்று தனித்தனியாக வர்த்தக சபை மற்றும் ஒவ்வொரு மொழி சார்பிலும் தனித்தனியாகத் தயாரிப்பு, தியேட்டர்கள் சங்கங்கள் போன்றவை உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாக ஏன் புறக்கணித்து உள்ளார்கள் என்று சங்கத்தினர் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here