Home செய்திகள் இந்தியா நவம்பர் மாதம் தான் பள்ளிகள் திறப்பா ? பள்ளிக்கல்வித்துறையின் பதில்..

நவம்பர் மாதம் தான் பள்ளிகள் திறப்பா ? பள்ளிக்கல்வித்துறையின் பதில்..

337
0
DPI
Share

நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வதந்திகள் பரவி வருகிறது. இது உண்மையல்ல என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோணா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு பல கட்டங்களாக தற்போது ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகள் திறப்பு காலவரையின்றி தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவலாகச் செய்திகள் பரவின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை எந்தவித அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பள்ளிகள் திறக்க தேவையான சூழல் அமையவில்லை. தற்போது ஆன்லைன் வகுப்புகள் பரவலாக நடந்து வருகிறது. ஆன்லைன் வகுப்பு முறைகளை மட்டும் தொடரும். பள்ளிக்கல்வித் துறை சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை இதே நடைமுறை தொடரும். பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் நல்ல முடிவை எடுப்பார் என்று காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here