Home செய்திகள் இந்தியா இந்தியா – சீனா 6வது கட்ட பேச்சுவார்த்தை அமைதியை எட்டுமா?…

இந்தியா – சீனா 6வது கட்ட பேச்சுவார்த்தை அமைதியை எட்டுமா?…

339
0
Indian Army Ladakh
Share

இன்று இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சீனா – இந்தியா ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. போரை தவிர்க்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சீனா இந்திய எல்லைக்குள் பல தூரம் ஆக்கிரமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்கள் முன்பு பாங் சோ ஏரி அருகே ஊடுருவிய சீனப்படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

“ரயில்வே துறையை காப்பாற்றுங்கள்“ டிவிட்டரில் டிரெண்டாகும் #SaveRailwaySaveNation!..

இந்நிலையில் சீனா இந்தியா மீது போர் தொடுக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் பேசி வருகின்றன. அதேபோல சீன ஊடகம் ஒன்று தற்போது எல்லைப்பகுதியில் குளிர் அதிகரித்து வருவதால் இந்திய ராணுவத்தால் அங்கு தாக்குபிடிக்க முடியாது என்ற ரீதியில் செய்தி வெளியிட்டது.

இருப்பினும் இந்த எல்லை பிரச்சனையை சுமூகமாக முடிக்க நினைக்கும் இந்தியா பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சீன கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் மோல்டோ பகுதியில் நடக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here