Home செய்திகள் இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா சென்னை ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு… டெல்லி உடன் இன்று மோதல் !

தக்க பதிலடி கொடுக்குமா சென்னை ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு… டெல்லி உடன் இன்று மோதல் !

378
0
Share

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றது. இதற்கு முன்பு இதே சீசனில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதற்கு தக்க பதிலடி சென்னை அணி கொடுக்கும் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பலரை கவலை கொள்ளச் செய்த பில்கேட்ஸ்..

இது வரை டெல்லி அணி இந்த சீசனில் நடைபெற்ற 8 போட்டியில் 6 வெற்றிகளும் 2 தோல்விகளும் பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இதே ஆர்ப்பரிப்பில் சென்னையை மீண்டும் மோத ஆவலுடன் டெல்லி அணி காத்திருக்கிறது.

சென்னை அணி இந்த சீசனில் நடைபெற்ற 8 போட்டியில் 3 வெற்றி மற்றும் 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ஐதராபாத் அணியை வீழ்த்தியது. அதே உற்சாகத்துடனும், பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடனும் இந்தப் போட்டியில் ஆக்ரோஷமாக சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது வரை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 22 முறை மோதி உள்ளது. இதில் சென்னை அணி 15 முறையும் டெல்லி அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here