Home ஆன்மீகம் மகாபாரதத்தில் உண்மையில் நல்லவன் யார் ? கிருஷ்ணனின் பதில்…

மகாபாரதத்தில் உண்மையில் நல்லவன் யார் ? கிருஷ்ணனின் பதில்…

1400
0
Share

மகாபாரதம் என்ற காவியத்தைத் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். பாண்டவர்கள், கௌரவர்கள் என இரு தரப்பினரிடையே நியாயத்திற்காகவும், தர்மத்திற்காகவும் போர் நடைபெற்றது. இந்த காவியத்தில் உண்மையில் நல்லவன் யார் ? பாண்டவர்கள் என்பவர்கள் ஐந்து சகோதரர்கள் ஐவருமே தேவர்களால் கிடைத்த புத்திரர்கள். கௌரவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் 100 சகோதரர்கள் அந்த இரு தரப்பினரிடையே 18 நாட்கள் நடந்த போர்தான் மகாபாரதப் போர்.

இந்தப் போர் ராஜ அரியணைக்காக நடத்தப்பட்டது என்றும், அது மட்டுமின்றி தம் உரிமைக்காகவும் நடத்தப்பட்டது என்றும். தர்மத்தை நிலைநாட்ட நடைபெற்றது என்றும் கூறுவர். இந்தப் போரில் 14ம் நாள் போருக்குச் செல்ல பாண்டவர்கள் தயாராக இருந்தபோது கிருஷ்ணரிடம் திரௌபதி (எ) பாஞ்சாலி ஒரு கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணா அனைத்தும் அறிந்தவன் நீ, இந்தப் போரில் வெற்றியும் நீ, தோல்வியும் நீ, இதைப் பற்றி சற்று விளக்குவாயா இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேள்வி எழுப்பினால். அதற்குக் கிருஷ்ணனோ இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்பதை முன்னரே அறிந்தால் சுவாரசியம் ஏது பாஞ்சாலி என்று உரைத்தார்.

ஆனால் இன்று ஓர் நல்லவன் மரணிக்கப்படுவான் என்று கூறினார். உடனே பாஞ்சாலியும், பாண்டவர்களும் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் பாண்டவர் தரப்பில் உள்ள மூத்தவரான தர்மன் தான் உலகத்திலேயே சிறந்தவன், நல்லவன் என்று போற்றப்படுபவனாக இருந்தான். அப்படியிருக்கக் கிருஷ்ணன் இப்படிக் கூறி விட்டாரே என்று அனைவரும் ஒரு நிமிடம் நடுநடுங்கிப் போய் விட்டனர். அடுத்துச் சுதாரித்துக்கொண்டு பாண்டவர்கள் போருக்குப் புறப்பட்டனர்.

இந்தப் போரில் பீமன் துரியோதனனையும், துச்சாதனனையும் வதம் செய்வதற்காக ரதத்தை அவர்கள் பக்கம் திருப்பினான். அப்போது விகர்ணன் குறுக்கிட்டான். விகர்ணன் என்பவன் துரியோதனனின் தம்பி. உடனே பீமன் விகர்ணனிடம் சற்று விலகி விடு உன்னுடைய அண்ணனுடன் போர் செய்ய உள்ளேன் என்று பொறுமையாகக் கூறினான்.

அதற்கு விகர்ணன் பீமா நீ என்னுடன் மோது அதன் பின் தான் நீ என் அண்ணனுடன் மோத முடியும் என்று கூறினான். பீமன் சிரித்தவாறே உன் மீது எனக்குத் தனி பாசம் உள்ளது. அது மட்டுமல்லாமல் நீ நல்லவன் தயவு செய்து வழியை விடு என்று கூறினான். உடனே விகர்ணன் இல்லை பீமா என்னை வென்றால் மட்டுமே நீ என் அண்ணனை நெருங்க இயலும் என்று கூறினான்.

விகர்ணா அன்று சூதாட்ட அரங்கில் பாஞ்சாலியின் துயில் உரியப்படும்போது தடுத்ததன் ஒரே காரணத்தினால் உன்னை என்னால் வதைக்க இயலாது என்று கூறினான். அதற்குப் பதில் ஒரு மாற்று வழியைக் கூறுகிறேன் எங்களுடன் சேர்ந்து விடு. பாஞ்சாலியின் மானம் காக்க எண்ணியதால் உன்னை மகுடம் சூட்டி அழகு பார்ப்போம் என்று கூறினான்.

அதற்கும் விகர்ணன் பீமா நான் அறம் வழி நடப்பவன் அன்று சூதாட்ட அரங்கில் ஒரு பெண்ணின் துயில் உரியப்படுவது தவறு என்ற காரணத்தினால் தடுக்க முற்பட்டேன். அதனால் மட்டுமே நான் தடுத்தேன். தற்போது என் சகோதரர்களைப் பாதுகாப்பதே என் அறமாகும் என்றுரைத்தான். இதனால் கோபம் அடைந்த பீமன் விகர்ணனுடன் யுத்தம் செய்து சாய்த்தான்.

இறுதியில் மனமுருகி பீமன் போர் முடிந்து திரும்பினான் அனைவரும் திரும்பி விட்டார்களே என்று அதிர்ச்சி கலந்த ஆனந்தத்துடன் பாஞ்சாலி கிருஷ்ணனிடம் இன்று ஒரு நல்லவன் மரணிக்கப்படுவான் என்று கூறினீரே தர்மனான என்னவர் உயிருடன் உள்ளாரே என்று சந்தேக கேள்வி எழுப்பினாள்.

அதற்குக் கிருஷ்ணனோ நல்லவர்கள் வாழும் உலகத்தில் நல்லவனாய் இருப்பதை விட அதர்மிகள் வாழும் மத்தியில் ஒருவன் நல்லவனாக இருப்பான் ஆனால் அவனே நல்லவன் என்று கூறினார். அந்த வகையில் விகர்ணன் நல்லவன் இன்று அவன் மரணித்தான் என்று கூறினார். பின்பு தர்மனும் விகர்ணனை நல்லவன் என்று கூறினான். அதை அடுத்து பாண்டவர்களும் விகர்ணனை நல்லவன் என்று கூறினார்கள்.

இதன் மூலம் எந்த இடத்திலும் தம் அறம் காப்பவனை நல்லவனாக இந்த உலகம் ஏற்கும் என்று கிருஷ்ணர் எடுத்துரைத்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here