Home செய்திகள் கொரோனா தமிழக அரசு அறிவித்த இலவச மாஸ்க் எப்போது?

தமிழக அரசு அறிவித்த இலவச மாஸ்க் எப்போது?

292
0
Share

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் இருந்து குடும்ப அட்டைகளில் உள்ள நபர்களுக்கு தலா 2 மாஸ்க் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தரப்படும் என்று அறிவித்திருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இன்னும் மாஸ்க் விநியோகம் ஆகாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அட்டையில் உள்ள நபர்களுக்கு தலா 2 மாஸ்க் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை இலவச மாஸ்க் ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. இம்மாதம் முதல் வாரத்தில் டோக்கன் கொடுத்து அனைத்து ரேஷன் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாஸ்க் விநியோகம் குறித்து எந்தவித அறிவிப்பும் ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்க வில்லை. பொதுமக்கள் நேரடியாக சென்று ரேஷன் கடை ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதற்கு எப்போது சரியான விடை கிடைக்கும் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது குறித்து நிர்வாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது :
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் சில இடங்களுக்கு கொடுத்துள்ளோம் அதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் உள்ள மாஸ்க்குகள் தலா 2 தர மாஸ்க் தயாரிக்க டெண்டர் கொடுத்துள்ளோம். டெண்டர் முடிந்து எங்களிடம் மாஸ்க் வந்த பிறகு உரிய அறிவிப்புடன் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தயாராக உள்ளோம். அதனால் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here