Home செய்திகள் இந்தியா வாட்ஸ்அப் பேமென்ட் இந்தியாவில் அறிமுகம்…

வாட்ஸ்அப் பேமென்ட் இந்தியாவில் அறிமுகம்…

701
0
Whats app
Share

கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்றவற்றைப் போலவே வாட்ஸ்அப் மூலமாகப் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் கூறியுள்ளார்.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் பயன்படுத்தத் தடை விதித்த பிறகு ஏராளமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதில் பேடிஎம், கூகுள் பே, போன் பே ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 400 மில்லியன் நபர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் குலோபல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் வாட்ஸ் அப் டிஜிட்டல் பேமெண்ட் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக எச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா, icici போன்ற வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மேலும் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்அப் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்காவும் இந்தியாவில் தன் பேமென்ட் முறையை அறிமுகப்படுத்தப் பல ஆண்டுகளாக யோசித்து வருகிறது.

எனவே வங்கிகள் கூட்டாண்மை முடிந்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பைமெண்ட் வந்துவிடும் என்று நம்புகிறோம் .அவ்வாறு வாட்ஸ்அப் பேமெண்ட் வந்து விட்டால் மற்ற பேமெண்ட் ஆஃப்களுக்கு கடும் போட்டியாக விளங்கும். இது வரை 400 மில்லியன் நபர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதில் குறைந்தது 200 மில்லியன் நபர்களாவது டிஜிட்டல் பேமெண்ட் முறையைப்  பயன்படுத்துவர். அப்படியிருக்க அந்த 200 மில்லியன் நபர்கள் வாட்ஸ் அப்பில் பேமெண்ட் வசதி வந்தபிறகு வாட்ஸ்அப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here