Home டெக்னாலஜிஸ் AUTOMATION வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் Whats app web dark…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் Whats app web dark…

724
0
whatsapp
Symbolic photo: whatsApp, Messeger, social networks, silhouettes of people on smartphone in front of logos, logo. | usage worldwide
Share

சமூக வலைத்தளங்களில் முக்கிய ஒன்றாக Whats app இருந்து வருகிறது இதில் நாளுக்கு நாள் பல்வேறு அப்டேட்  அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ்அப் இல்லாமல் இருப்பதே கிடையாது இத்தகைய சூழலில் தற்போது ஊரடங்கு காரணமாகப் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு  இதன் வாயிலாகக் கலந்துரையாடுகின்றனர்.
அதற்கு whats app web மற்றும் desktop app ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்  whatsappweb, desktop app ஆகியவை எந்த ஒரு அப்டேட்ம் இன்றி சாதாரணமாகவே இருந்தன. தற்போது இதிலும் dark தீம், ஸ்டிக்கர் எனப் பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி உள்ளது.
இந்த புதிய அப்டேடை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ios, android  என அனைத்து os -க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
 1. Google Play Store அல்லது Apple App Store மூலமாக உங்கள் WhatsApp மொபைல்  ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
2 web.whatsapp.com அல்லது உங்கள் WhatsApp desktop app-ஐ திறந்து கொள்ளவும்.
3. உங்கள் WhatsApp கணக்கை WhatsApp Web QR code மூலமாகச் சரிபார்த்து இணைத்துக் கொள்ளவும்.
4.உங்களுடைய எல்லா தொடர்புகளும் (contacts) காண்பிக்கப்படும்  window-வின் மீது வலது மேல் பக்க மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை(menu) கிளிக் செய்யவும்.
5. அதில் ‘Settings’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
6.அதிலிருந்து ‘Theme’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
7. Dark Mode-ஐ enable செய்வதற்கு, இந்த புதிய ஆப்ஷன் Window-இல் Dark என்பதை க்ளிக் செய்யவும். தற்போது டார்க் மோட் மாறிவிடும்.
Android Mobile-இல் எப்படி Dark Mode theme’ஐ இயக்குவது?
1. WhatsApp ஐ திறந்து மேல் வலதுபக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை(menu ) க்ளிக் செய்யவும்.
2. அதில் Settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
3.‘Chats’ ஆப்ஷனை திறக்கவும்.
4.‘Theme’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
5. Enable Dark mode-ஐக் க்ளிக் செய்யவும்.
iOS’ல் Dark Mode theme’ஐ எவ்வாறு இயக்குவது?
1. Settings panel ஐ திறக்கவும்.
2.‘Display & Brightness’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
3.system-wide dark mode’ஐ இயக்குவதற்கு Dark ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here