Home அறிவியல் What’s app பொது உதவிக்குறிப்புகள் , தந்திரங்கள் மற்றும் எச்சரிக்கைகள்

What’s app பொது உதவிக்குறிப்புகள் , தந்திரங்கள் மற்றும் எச்சரிக்கைகள்

792
0
Whats app
Share

நாம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியம் என்று பயன்படுத்தி வரும் Whats app ஆனது secure என்று நினைத்து விடாதீர்கள், எவ்வளவு secure app இருந்தாலும் Hackers எளிதில் தன்வசம் படுத்திக்கொள்கின்றனர். ஆகவே நாம் உபயோகிக்கும் whats app செயலியைச் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும்.

Whats app செயலியில் ப்ரோபைல் இமேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் வைப்பது தற்போது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும், இதனைப் பயன்படுத்தி hackers தேவையானவற்றைச் சேகரித்துக் கொள்கின்றனர். மேலும் நமது ப்ரோபைல் மற்றும் ஸ்டேட்டஸ் விவரங்களைப் பார்த்துக் கொள்ளையடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே சுயவிவரப்படத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது சிறப்பு. அதேபோல் தங்கள் வைத்திருக்கும் படம் தங்களது முழு விவரத்தையும் எடுத்துச் சொல்பனவாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

இம்மாதிரியான செயலை குறைக்க Whats app நிறுவனம் புதிய புதிய யுக்திகளை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பின்வருவனவற்றில் காண்போம்.

இருண்ட பயன்முறை தற்போது :

Whatsapp Dark mode

வாட்ஸ்அப்பிற்கான டார்க் பயன்முறை ஒரு பழக்கமான அனுபவத்தில் புதிய தோற்றத்தை வழங்குகிறது. இது குறைந்த ஒளி சூழலில் கண் அழுத்தத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தொலைப்பேசி அறையை ஒளிரச் செய்யும் மோசமான தருணங்களைத் தடுக்க இது உதவும் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டுக்கான கைரேகை பூட்டை அறிமுகப்படுத்துகிறது:

Fingerprint Sensor

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க ஐபோனுக்கான டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடியை வெளியிட்டுள்ளது. இதே போன்ற அங்கீகாரத்தை, ஆதரிக்கும் Android தொலைப்பேசிகளில் உங்கள் கைரேகை மூலம் பயன்பாட்டைத் திறக்க உங்களை அனுமதிக்கிறது. இதை இயக்க, Settings > Account > Privacy > Fingerprint lock கைரேகையுடன் திறப்பதை இயக்கி, உங்கள் கைரேகையை உறுதிப்படுத்தவும்.

வாட்ஸ் ஆப் குரூப்பில் பாதுகாப்பு அம்சங்கள்:

தங்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் யாரெல்லாம் வேண்டுமோ, வேண்டாமோ, யார் மட்டும் குழு தலைவராக இருக்க வேண்டும் மற்றும் தலைமை நிலையில் உள்ளவருக்கு மட்டும் தான் எல்லாவிதமான கட்டுப்பாடுகளை உறுதி செய்ய முடியும். இதனைப் பயன்படுத்தி தேவையவர்களை மட்டும் குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

Whatsapp செயலியில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்:

Forward Message
தற்போது அனைவரும் முக்கிய செய்திகளை Whatsapp ஷேர் செய்து பார்க்கின்றனர். இதனை அறிந்து பலர் வதந்திகளைப் பரவி அனைவரையும் அச்சத்தில் உள்ளாக்கி விடுகின்றனர், ஆகவே இம்மாதிரி வரும் குறுஞ்செய்தியைப் பரவாமல் தடுக்க வேண்டும். இதனாலேயே இந்த நிறுவனம் forward மெசேஜ் என்று அறிவுக்கும் வகையில் உள்ளது. இதனை அறிந்து தங்களுக்கு வரும் வதந்திகளைப் பரவவேண்டாம் என சைபர் கிரைம் கூறியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here