Home செய்திகள் இந்தியா மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடும் வெப்சீரிஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..

மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடும் வெப்சீரிஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..

497
0
Share

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலிலிருந்ததால் படங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளும் திறக்கப்படவில்லை.

சூப்பர் ஹீரோ படங்களை வெளியிடுவதில் மார்வெல் ஸ்டுடியோ ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம்,மிகவும் பிரபலமானது. மே மாதம் பிளாக் விடோ பட ரிலீசுக்கா காத்திருந்தது. ஆனால் கொரோணா பரவல் காரணமாக இந்தப் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. அது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படப்பிடிப்புகளும் நடைபெறாமல் கடும் நெருக்கடியில் திரையுலகம் மூழ்கியது.

இந்த ஆண்டு ஏராளமான படங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட காத்திருக்கின்றது. இத்தகைய சூழலில் மார்வெல்ஸ் ரசிகர்களுக்கு மனம் வருந்தாமல் இருப்பதற்காகப் புதிதாக வெப்சீரிஸ் ஒன்றைத் தயாரித்து வெளியிடவுள்ளது.

இந்த வெப்சீரிஸ் வாண்டா விஷன் என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ளது. தற்போது மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கும் வாண்டா விஷன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிசய சக்தி வாய்ந்த பெண்ணுக்கும் ரோபோவுக்கும் இடையே ஏற்படும் காதல் கலந்த அட்வென்ச்சர் கதை தான்.

காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்க்கெட் திறப்பு !

இந்த சீரிஸ் டிஸ்னி பிளஸ்ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஹாட்ஸ்டார் மூலமாகக் காண முடியும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு பிரீமியம் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்ற VIP சந்தா வாடிக்கையாளர்கள் இதைப் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here