Home செய்திகள் இந்தியா நாங்க எப்பவுமே சூர்யா பக்கம்தான்!.. ட்ரெண்டாகும் #TNStandWithSuriya …

நாங்க எப்பவுமே சூர்யா பக்கம்தான்!.. ட்ரெண்டாகும் #TNStandWithSuriya …

630
0
Surya
Share

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்று முடிந்தது. முன்னதாக நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். நடிகர் சூர்யா நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து விட்டதாக வெளியான செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கை ஆளும் மத்திய மாநில அரசுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!…

கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அரசியல்வாதிகளும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுப்போரும் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here