Home டெக்னாலஜிஸ் IOT வோடபோன் ஐடியா இனி புதிய அடையாளத்தில் !

வோடபோன் ஐடியா இனி புதிய அடையாளத்தில் !

210
0
Share

இந்தியாவில் ஜியோ வருகைக்குப் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. ஏராளமான நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் ஆபர்களையும் வாரி வழங்கியதன் மூலம் தங்கள் வியாபாரத்தைத் தக்க வைத்துள்ளது.மேலும் ஒரு சில நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஜியோ விற்கு எதிராக தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.vodafoneidea

அந்த வகையில் 2018 ஆண்டு வோடபோன் மற்றும் ஐடியா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்தது. இரண்டு நிறுவனங்களும் வோடாபோன் ஐடியா என்ற பெயரில் தான் இவ்வளவு காலம் தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து ஜியோவிற்கு எதிராக நடத்தி வந்தது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து புது அடையாளமாக ஒரு லோகோவை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் VI என வைத்துள்ளது.

இதன் அர்த்தம் V என்பது வோடபோனையும் I என்பது ஐடியாவையும் குறிக்கிறது. இனி அனைத்து வியாபாரத்திலும், சிம் கார்டு, வெப்சைட், பில் பேப்பர் போன்ற அனைத்திலுமே இந்த லோகோ பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல பூஜைக்குப் பக்தர்கள் அனுமதி ! ஆனால் அனைவருக்கும் அல்ல.

இது தொடர்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிந்தர் தாக்கர் கூறியிருப்பது : வோடபோன் ஐடியா இணைந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாங்கள் தொடர்ந்து 2 நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் நல்ல சேவையை வழங்கி வந்தோம். மேலும் நெட்வொர்க் கட்டுமானத்திற்காக 5ஜி நெட்ஒர்க்கில் அடுத்த மைல்கல்லை எட்ட முயற்சி செய்து வருகிறோம். எனவே வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பைத் தருமாறும் கோரிக்கை வைக்கிறோம். தொடர்ந்து எங்கள் பிராண்ட் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here