Home செய்திகள் இந்தியா பாலிவுட், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சிய விஜய் !

பாலிவுட், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சிய விஜய் !

443
0
Share

பாலிவுட், கோலிவுட் திரையுலக சூப்பர் ஸ்டார்களை எல்லாம் ஓரங்கட்டி முதலிடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். பொழுதுபோக்கிற்காகப் பழைய படங்களையும் OTT சீரிஸ்களையும் பார்த்து வந்தனர். தொலைக்காட்சிகள் மக்களின் மனதை ஈர்க்க முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிபரப்பி வந்தன.

இதில் விஜய் படங்களைத் தான் பொதுமக்கள் அதிகம் பார்த்தனர், மற்ற படங்களுக்கு விஜய் படத்திற்கு இருந்த அளவிற்குப் பார்வையாளர்கள் இல்லை.

எனவே விஜய் மற்ற நடிகர்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பார்வையாளர்கள் விவரம் :

விஜய் முதலிடம் = 117.9 மில்லியன் பார்வையாளர்கள்.

லாரன்ஸ் 2-ம் இடமும் = 76.2 மில்லியன் பார்வையாளர்கள்.

ரஜினி மூன்றாவது இடம் = 65.8 மில்லியன் பார்வையாளர்கள்.

அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 13வது வாரம் முதல் 27வது வாரம் வரை மட்டுமான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here