Home செய்திகள் இந்தியா 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல்!

800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல்!

467
0
Share

இலங்கையின் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக்க முடிவு செய்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ட்விட்டரிலும் #ShameOnVijaysethupathi என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. பலரும் இந்த ஹாஷ்டாக் பயன்படுத்தி விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

ஆனால் விஜய் சேதுபதி இதற்கு விளக்கமளித்தார். நான் கேட்ட கதை என்னவென்று படம் வெளியான பிறகு கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும் நான் பின்வாங்க போவதில்லை என்றும் சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வேண்டாம் ஒரு நல்ல கலைஞருக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே ஒரு நல்ல கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 800 படத்திலிருந்து விஜய் சேது விலக முடிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரன் வேண்டுகோளை சுட்டிக்காட்டி நன்றி, வணக்கம் என விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here