Home செய்திகள் இந்தியா பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தொடரில் விஜய் சேதுபதி !

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தொடரில் விஜய் சேதுபதி !

899
0
Share

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை தொடராக இயக்க முடிவு செய்துள்ளனர். இந்த தொடரில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றறை தொடராக இயக்கம் உள்ளனர். இந்தத் தொடரை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே வீரப்பன் கதையை மையமாக வைத்து வனயுத்தம் என்ற படத்தையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக வைத்து குப்பி என்ற படத்திலும் எடுத்து வெளியிட்டார்.

விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்களை அறிமுகம்! வெப் வாட்ஸ்அப் லேட்டஸ்ட் அப்டேட்…

இது தொடர்பாக ஏ.ஏன்.எம்.ஆர் ரமேஷ் கூறியிருப்பதாவது :
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த போராளி இவரது வாழ்க்கை வரலாறை இயக்க ஆர்வமாக உள்ளேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்த தொடரில் இருக்கும்.

சுவிட்சர்லாந்து, டென்மார்க் நாடுகளுக்கு பயணித்து பிரபாகரனோடு நெருக்கமாக பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனை சந்தித்து பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு 6 தடவை சென்று தகவல்களை திரட்டி இருக்கிறேன்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here