Home செய்திகள் இந்தியா மகேஷ் பாபுவின் சவாலுக்கு பதிலடி தந்த விஜய்…

மகேஷ் பாபுவின் சவாலுக்கு பதிலடி தந்த விஜய்…

468
0
Share

நடிகர் விஜய் மரம் நட்ட புகைப்படம் தற்போது டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. டிவிட்டரில் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ் பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு அவரது பிறந்த நாள் அன்று மரம் நடுவதை குறித்து புகைப்படம் ஒன்று ட்வீட் பண்ணி இருந்தார். அந்த டிவீட்டில் தளபதி விஜய்க்கும் நீங்கள் இது போல் செய்ய வேண்டும் என்று க்ரீன் இந்தியா என்று சேலஞ்சை விடுத்திருந்தார். இது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தளபதி விஜய் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட வகையில் தற்போது அவரே மண்வெட்டி மூலம் மூலம் குழி எடுத்து மரம் நடும் புகைப்படம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதே போல் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை அனைவரும் நிறைவேற்றினால் பசுமை இந்தியா ஆகும். சுற்றுச்சூழல் சுகாதாரத்துடன் இருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் விஜய் குறித்த செய்தி மற்றும் அவரது புகைப்படம் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த சேலஞ்சை ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here