Home அறிவியல் சூரியனின் அரியப் புகைப்படம்…

சூரியனின் அரியப் புகைப்படம்…

494
0
Nasa
Share

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூட்டாக இணைந்து சூரியனை ஆய்வு செய்கின்றனர். அதில் அவ்வப்போது சூரியனின் நிலையைப் படமெடுத்து ஆராய்ச்சி செய்கின்றனர். அதன்படி சூரியனுக்கு மிக அருகிலிருந்து எடுத்த புதிய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஆம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 47 மில்லியன் தூரத்திலிருந்து இந்த படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தூரத்தின் கால் பகுதியாகும்.

மேலும் கடந்த புகைப்படத்தைக் காட்டிலும் தற்போது கிடைத்துள்ள புகைப்படத்தில் சூரியனின் மேற்பகுதியில் உள்ள தீப்பிழம்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதாம்.

இதுவரை இல்லாத அளவிற்கு மிக அருகில் எடுக்கப்பட்ட இப்படம் சூரியன் பற்றிய அடுத்தடுத்த ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

இந்த படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here