Home முகப்பு உலக செய்திகள் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளியை திறக்கும் இங்கிலாந்து!…

கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளியை திறக்கும் இங்கிலாந்து!…

420
0
School opening
Share

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வல்லரசு நாடுகளையே நடுநடுங்க வைத்த இந்த கொரோனா தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை ஸ்தம்பித்துள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

மிக கொடூரமான இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கான இறுதி கட்டத்தை பல்வேறு நாடுகள் அடைந்துள்ளன.

இந்த சூழலில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸால் இதுவரை 3,35,873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,501 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையிலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

வுஹானுக்குச் செல்லாமலேயே வுஹான் ஆய்வை முடித்த உலக சுகாதார அமைப்பு!.. கடுப்பில் உலக நாடுகள்!…

இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா வைரஸால் பள்ளியில் ஏற்படும் ஆபத்து குறைவு. குழந்தையின் வளர்ச்சிக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் இனியும் பள்ளியிலிருந்து விலகியிருப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

நம் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதும், அவர்களுடைய நண்பர்களுடன் இருப்பதும் மிக முக்கியம். பள்ளிக்கு திரும்புவதைவிட வேறு எதுவும் நம் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது, என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் இன்று முதல் இங்கிலாந்தில் 40% பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்றும், நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here