Home ஆன்மீகம் கொரோனவால் திருப்பதி லட்டு விலை குறைப்பு ! 25 மட்டுமே…

கொரோனவால் திருப்பதி லட்டு விலை குறைப்பு ! 25 மட்டுமே…

747
0
Share

கொரோனா பரவலை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு எந்த ஒரு தெய்வ ஸ்தலங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. அதன் பிறகு சிறிது காலம் தளர்வுகள் பேரில் திறக்கப்பட்ட கோவில்களில் திருப்பதியும் ஒன்று. அப்படித் திறந்த திருப்பதி கோவிலில் எவ்வளவு தான் கட்டுப்பாடு நடைமுறைகளைக் கடைப்பிடித்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இது வரை எப்போது பக்தர்கள் தரிசனம் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவில்லை. ஆனால் பக்தர்கள் தரிசனம் இல்லாவிட்டாலும் பகவானது பிரசாதமான லட்டு கிடைக்குமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேவஸ்தானம் இதற்கு தற்போது பதில் அளித்துள்ளது.

50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பிரசாத லட்டு விலை வெறும் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யத் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இந்த சலுகை கொரோனா முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இ – பாஸ் இல்லையா ! இன்று முக்கிய ஆலோசனை.

தேவஸ்தான லட்டுக்கள் ஆந்திர மாநிலம் முழுவதும் தேவஸ்தான மையங்கள் மற்றும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், வேலூர், கன்னியாகுமரி போன்ற தேவஸ்தான தகவல் மையங்கள் வாயிலாக வினியோகம் செய்யத் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. எனவே விருப்பமுள்ள பக்தர்கள் அதிக அளவு லட்டு பிரசாதத்தை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் லட்டு பிரசாத விற்பனை குறித்து தேதி அறிவிக்கப்படும் எனத் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here